நயன்தாரா சமரசம்

சூர்யா நடிக்கும் மாஸ் படத்தில் ஸ்ருதிஹாசன், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடிப்பது தெரிந்த செய்தி. இந்த ஜோடிகளோடு நயன்தாராவையும் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அழைத்தனர். அதற்கு நயன்தாரா மறுத்து விட்டார்.  சம்பளத்தை அதிகரித்து கேட்டதாக சொன்னாலும்,  நிஜக்காரணம் அது இல்லை. ஸ்ருதியோடு நடிப்பதில் அவருக்கு சில தயக்கங்கள் இருப்பதாக தெரிகிறது.   இதை நாசூக்காக சொல்லியும் விட்டார். சரி என்று படப்பிடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வந்தனர் குழுவினர்.  ஒரு பக்கம் படப்பிடிப்பை நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் நயன்தாராவை சமாதானப்படுத்தும் முயற்சி செய்து, இதில் வெற்றியடைந்துள்ளனர். அந்தக் கேரக்டரில் நடிக்க நயன்தாரா சம்மதித்து இருப்பதாக யூனிட் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

Labels: