நிக்கோல்ஸ் கேஜ் நடிப்பில் 2007 ஆண்டு வெளிவந்த திரைபடம். science-fiction action thriller என்னும் வகையில் அமைந்த இத்திரைப்படம் மேற்கத்திய திரைப்படங்களுக்கே உரிய தனித்தன்மையில் எடுக்கப்பட்டுள்ளது.
கதாநாயகனுக்கு அடுத்து என்ன நடுக்கும் என்பது தெரியும் என்பதான சக்தி உள்ளது. முன்கூட்டியே நமக்கு நடக்கும் அசம்பாவிதங்களை உணர்ந்து கொள்ளும் மனநிலை இருந்தால் யாருக்கும் உறக்கமெ வராது. அதையும் தாண்டி அவனுக்கு நிகழும் காவல்துறையின் தலையீடு என பல வகையில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து இத்திரைபடம் எடுக்கப்பட்டுள்ளது
திரைப்படம் கருத்துகளை திணிக்க வல்லதாக மட்டுமே இல்லாமல். பொழுது போக்கிற்காகவும் சிறிது சிந்திக்கவும் தேவை. சகமனிதரின் வாழ்வியலை உணரும் தன்மை வேண்டும் என்பதை இத்திரைப்படம் உணர்த்தும்.