சம்சாரம் அது மின்சாரம் - திரைபடம்

சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் 1986 ல் வெளிவந்தது. 

குடும்ப வாழ்வு என்ன என்பதை அழகாக சொன்ன படம்.

பழைய படங்களைப் பார்த்து அதற்கென்ன புதிய விமர்சனம் என்ற கேள்வி எழுபவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டுமே சொல்ல  வேண்டும்.

பழைய இலக்கியங்களை மீள்வாசிப்பு என்று நாம் நவீன இலக்கியத்தில் குறிப்பிடுவதுபோல் திரைப்படங்களையும் மீள்பார்வையிடுதல் அவசியமாகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்துள்ள திரைப்படங்களில் பொதிந்திருக்கும் கருத்துகள். வன்மம். ஆபாசம். மது. புகைபிடித்தல் போன்ற காட்சிகளில் அமைப்பு 80களில் வெளிவந்த படங்களில் 1 சதவீதம் மட்டுமே காணமுடிகிறது.

சம்சாரம் அது மின்சாரம் என்ற இத்திரைப்படம் உணர்த்தும் வாழ்வியல் அனுபவங்கள் கூட்டு குடும்பம். அன்பு. தனிமனித ஒழுக்கம் என்ற முறையில் அமைந்திருப்பதாக உணரலாம். இத்திரைப்படம் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு கருத்தை ஏற்படுத்த வல்லது. ரோஜா மலரைப் பார்ப்பவர்களின் கண்களுக்கு ஏற்ப தோன்றுவது போல். 

திரைப்படம் முடியும் தருவாயில் கண்ணீர் மல்க நம் தமிழ் கலாச்சாரத்தைப் போற்றி புகழ்ந்திடுவோம்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று வள்ளுவர் குறிப்பிட்டு இருப்பது வெறும் ஆடைகள். மொழியின் உச்சரிப்பு. ஆகியவற்றில் மட்டும் அடங்கிவிடாது. நாம் கொண்டாடும் இன்றைய நாகரிகம் வெறுமையைக் கொண்டது. இந்த வாழ்வின் புரிதல் இத்தகைய படங்களின் வழியாகவே அறிய இயலும். இத்தகைய திரைபடங்கள் இன்று வெற்றி பெறுமா என்பது கேள்வி குறி. எனினும் நல்ல கதாபாத்திரங்களையும். இரசிக்க தக்க கதை அம்சத்தையும். கொண்ட படங்கள். கருத்து சொல்வனவாக அல்ல பொழுது போக்குக்காக கூட இருக்கட்டும். நல்லதைச் சொல்லி நல்லதாக இருக்கட்டுமே. இத்தகைய திரைபடங்களை மீள்பார்வை செய்வதில் நமக்கு அக்கறை வேண்டும் என்ற அவாவின் பேரில் இதனைப் பதிவிடுகிறேன்.

படத்தை காண
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CqTeg4RZwnI#!

Labels: